ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. பாகிஸ்தான், இந்தியாவிலும் உணரப்பட்டதாக தகவல்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த வாரம் பேரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் சுவடுகள் மறையும் முன்பே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மற்றும் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களின் பல நகரங்களிலும் 6 புள்ளி 2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனால் மக்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி மற்றும் காஷ்மீரிலும் உணரப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.





