மண் சரிவில் சிக்கி உயர்தர மாணவன் பரிதமாக பலி
கொலன்னாவை, குடாலிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் இன்று அதிகாலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் அச்லா அகலங்க தொரபனே தேசிய பாடசாலையில் உயர்தர கல்வி கற்று வருகின்றார்.
அப்பகுதி மக்களும் பொலிஸாரும் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் எடுத்து அவரைக் கண்டுபிடித்து வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
கொலன்னாவை செயலகப் பிரிவில் உள்ள பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு முதல் பெய்து வரும் அடை மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல வீதிகளின் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் பிரதேச அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொரபனே தேசிய பாடசாலை மற்றும் தாபனை ஆரம்ப பாடசாலை என்பன போதிய வருகையின் காரணமாக மூடப்பட்டடுள்ளன.