தென்னாப்பிரிக்காவில் அதிகாலை இடம்பெற்ற சோகம் – 03 பேர் மரணம்!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் ( மேற்கே உள்ள சோவெட்டோ டவுன்ஷிப்பில் (Johannesburg) இன்று அதிகாலை இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது மொத்தம் ஆறு பேர் உள்ளே இருந்ததாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கிய மூன்று பேரை அவசரகால பணியாளர்கள் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக கடலோர நகரமான டர்பனுக்கு அருகில் இருந்த இந்து கோவில் ஒன்று இடிந்து விழுந்தது. இவ்வாறாக கட்டிடங்கள் இடிந்து விழும் விபத்துகள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





