இலங்கை

நல்லூர் உற்சவ காலத்தில் கடமை ஆற்றிய பொலிஸார் மட்டும் சாரணங்களுக்கு கிடைத்த கௌரவம்

நல்லூர் உற்சவ காலத்தில் கடமை ஆற்றிய பொலிஸார் மட்டும் சாரணங்களுக்கு மதிப்பளிக்க நிகழ்வு இன்று நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய வருடாங்க மகோற்சவம் கடந்த 21 ம் திகதியிலிருந்து ஆரம்பமாகி இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் உற்சவ காலங்களில் பாதுகாப்பு கடமை மற்றும் வீதி தடைகளில் கடமையாற்றி உற்சவ காலத்தில் பக்தர்கள் கந்தனை வழிபடுவதற்கு ஒத்துழைத்த பொலிஸார் மற்றும் சாரணர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நல்லூர் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்றது

இன்று காலை உற்சவ காலத்தில் கடமையாற்றியவர்களுக்காக விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று காளாஞ்சியும் கையளிக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் யாழ்மாவட்ட சாரண சங்கத் தலைவர் பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!