மகளிர் தினத்தில் போதைப்பொருள் பார்ட்டி : 5 மாணவிகள் உட்பட 27 பேர் கைது
மகளிர் தினமான வெள்ளிக்கிழமை (08) இரவு பல்கலைக்கழக மாணவி ஒருவரின் பிறந்தநாள் விழாவிற்கு பேஸ்புக் ஊடாக அழைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவிகள் ஐவர் உட்பட இருபத்தேழு பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.அவர்களில், தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகள் மற்றும் 12 ஆண் மாணவர்கள் உட்பட இருபத்தேழு பேர் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று விபச்சாரிகளும் உள்ளடங்குவதுடன், காலி பிரதேசத்தைச் சேர்ந்த நண்பர்கள் நால்வர் வாடகைக்கு எடுத்த காரில் விருந்துக்கு போதைப்பொருள் கொண்டு வந்தமை தெரியவந்துள்ளது.
தியத்தலாவ பிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்க ஹோமாகம உடுவான பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு 45,000 ரூபாய் வாடகைக்கு விடப்பட்ட வீட்டில் அவரது இருபத்தி இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த விருந்து இடம்பெற்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களால் 20 மில்லிகிராம் ஹஷிஸ் போதைப்பொருள், வேகன் ஆர் ரக கார், மூன்று போதைப்பொருள், மூன்று கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கஹதுடுவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியங்கரவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.