போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்- 6,641 பேர் கைது
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கைகளில், போதைப்பொருளுடன் தொடர்புடைய 6,641 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளில் 1,793 கிலோகிராம் ஹெரோயின், 3,683 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
மேலும், 16,686 கிலோகிராம் கஞ்சாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.





