ஐரோப்பா செய்தி

பெல்ஜியத்தில் ட்ரோன் ஊடுருவல்கள் அதிகரிப்பு – களமிறங்கும் பிரித்தானியா!

பெல்ஜியத்தில் (Belgium) ட்ரோன் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அந்நாட்டின் வான் பரப்பை பாதுகாக்க இங்கிலாந்து உதவுவதாக அறிவித்துள்ளது.

பெல்ஜியத்தின் ஜுவாண்டெம் (Zavantem)   விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவ்விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வான் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இங்கிலாந்திடம் உதவி கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய பாதுபாப்பு செயலாளர்  ஜான் ஹீலியுடன்  (John Healey)  கலந்தாலோசித்த இராணுவ தலைவர்  சர் ரிச்சர்ட் நைட்டன் (Sir Richard Knighton) பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி பெல்ஜியத்திற்கு  இராணுவ வீரர்களும் உபகரணங்களும் அனுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக பெலாரஸ் வான்பரப்பிற்குள் ட்ரோன்கள் ஊடுருவும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதன் பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் ரஷ்யாவில் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!