ஜனாதிபதி செயலகம் நோக்கி பறந்த ட்ரோன் – கொழும்பில் கைதான வெளிநாட்டவர்
காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி அனுமதியின்றி ட்ரோனை பறக்கவிட்டதற்காக வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் டச்சு நாட்டவர் என தெரியவந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த நபர் பயன்படுத்திய ட்ரோனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக கோட்டை பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரோன் பறக்கவிடப்பட்டதனை முதலில் அவதானித்து விமானப்படை அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்து கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 56 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் திலீப சி. பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
(Visited 6 times, 1 visits today)





