ஹைட்டியின் தலைநகரில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 11 பேர் மரணம்
ஹைட்டியின் தலைநகரில் ஒரு கும்பல் தலைவரை இலக்காகக் கொண்ட ட்ரோன் தாக்குதலில் எட்டு குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
ட்ஜோமா என்றும் அழைக்கப்படும் கும்பல் தலைவரான ஆல்பர்ட் ஸ்டீவன்சன் தனது பிறந்தநாளைக் கொண்டாடி குழந்தைகளுக்கு பரிசுகளை விநியோகித்துக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் கும்பல் தலைவரான ஸ்டீவன்சன் காயமின்றி உயிர் தப்பித்தாக உரிமை குழு தெரிவித்துள்ளது.
முதல் ட்ரோன் தாக்குதலில் 2 முதல் 10 வயது வரையிலான எட்டு குழந்தைகளும்மூன்று பெரியவர்களும் உயிரிழந்தனர். மேலும் ஆறு குழந்தைகள் காயமடைந்தனர்.
இரண்டாவது ட்ரோன் கும்பலின் தலைமையகத்திற்கு அருகில் விழுந்து, நான்கு கும்பல் உறுப்பினர்களைக் கொன்றது மற்றும் ஏழு பேர் காயமடைந்ததாக தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு வலையமைப்பின் நிர்வாக இயக்குனர் பியர் எஸ்பெரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.





