கலிபோர்னியாவில் சாரதி இல்லாத கார்கள் ஹாரன் அடிக்கின்றன
கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ நகரவாசிகளின் இரவு தூக்கத்தை கெடுக்கும் வகையில் வாகனங்களில் ஒலி எழுப்பப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வாகன நிறுத்துமிடத்திலிருந்து சத்தம் வருவதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் சம்பவத்தை படம்பிடித்துள்ளார்.
மேலும் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 30 கார்களில் சில கார்கள் மட்டும் நள்ளிரவில் ஓட்டுநர்கள் இல்லாமல் ஹாரன் அடிப்பதை காண முடிகின்றது.
ஆனால், அந்த கார் நிறுத்துமிடம் டிரைவர் இல்லாத கார்களை சோதனை செய்யும் வேமோ நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது பின்னர் தெரியவந்தது.
தன்னியக்கமாக ஓட்டும் போது கார்கள் மோதுவதைத் தவிர்க்க உதவும் புதிய மென்பொருளால் ஹான் சத்தம் ஏற்பட்டதாக நிறுவனம் கூறியது.
எதிர்காலத்தில் இந்த சத்தம் அண்டை வீட்டாரின் தூக்கத்தை கெடுக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேமோ நிறுவனம் தெரிவித்துள்ளது.