புதிய சுகாதார செயலாளராக டாக்டர் பாலித மஹிபால நியமனம்?

சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த ஓய்வு பெறுவதால் அவரின் சேவைக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த சுகாதார செயலாளராக டொக்டர் பாலித குணரத்ன மஹிபால நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சுகாதார செயலாளராக டொக்டர் மஹிபால திங்கட்கிழமை (20) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டாக்டர் மஹிபால இதற்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார். அவர் ஏப்ரல் 2019 இல் பாகிஸ்தானில் WHO பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
(Visited 8 times, 1 visits today)