வட அமெரிக்கா

நியூயார்க் மாநிலத்தில் அமெரிக்க குடியேற்ற சோதனைகளில் டஜன் கணக்கானவர்கள் கைது

அமெரிக்காவின் குடிநுழைவு, சுங்கத்துறை மத்திய அமலாக்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கேத்தி ஹோசலும் குடியேறிகளுக்காக வாதாடும் குழுக்களும் தெரிவித்துள்ளன.

காட்டோ, ஃபுல்டன் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

“அதிகாரிகள் நடத்திய சோதனையால் 40க்கும் அதிகமான பெரியவர்கள் கைது செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது,” என்று ஹோசுல் சொன்னார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின்கீழ் உள்ள குடிநுழைவு, சுங்கத்துறை, குடியேறிகளை அமெரிக்காவிலிருந்து அப்புறப்படுத்தும் பணியைச் செய்து வருகின்றனர். அதற்கென இதுவரை இல்லாத அளவில் நிதியும் சோதனைகளை நடத்த புதிய அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

டிரம்ப் ‘மோசமான’ குற்றவாளிகளை நாடுகடத்தப்போவதாகக் கூறியபோதும் குற்றம் புரியாதோர் அதிகம் குறிவைக்கப்படுவதைக் குடிநுழைவு, சுங்கத்துறை அதிகாரிகள் பிடிபட்டவர்கள் புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.

சத்துணவுப் பொருள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை ஒன்றில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைக்குப் பின் 70க்கும் அதிகமான ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டதாக ரூரல் அண்ட் மைகிரெண்ட் மினிஸ்ட்ரி என்ற அமைப்பு ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆக பெரிய அளவிலான சோதனை சத்துணவுப் பொருள் தொழிற்சாலையில்தான் இடம்பெற்றது என நியூயார்க் டைம்ஸ் நாளேடு குறிப்பிட்டது.

“அமெரிக்க எல்லையைப் பாதுகாத்து அதிக வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற நியூயார்க் மாநிலம் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும். ஆனால், குடும்பங்களைப் பிரித்து பிள்ளைகளை ஆதரவின்றி தவிக்கவிடும் சூழல் ஏற்படுவதற்கு நான் ஒருபோதும் துணை நிற்கமாட்டேன்,” என்று ஹொசுல் சொன்னார்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்