இலங்கையை உலுக்கிய இரட்டை படுகொலை – முக்கிய சந்தேகநபரை சுற்றிவளைத்த பொலிஸார்
அங்குருவாதொட்ட, உருதுதாவ தாய் மகள் என இரட்டை படுகொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த பெண்ணின் கணவனின் உறவினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். எனினும்,அந்த நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையிலேயே அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா ஆகியேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர். அவரது கணவர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடளித்துள்ளார்.
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் வீட்டில் காணப்படாத நிலையில், அதன் பின்பகுதியிலும் அதனைச் சுற்றியிருந்த காடுகளிலும் முழுமையான தேடுதலின் போது சந்தேக நபர் சில வாழை மரங்களுக்கு பின்னால் மறைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் உடனடியாக செயற்பட்ட பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி அவரை துரத்திச் சென்று அவருடன் மோதிலில் ஈடுபட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்போது சந்தேக நபர் பெரிய கத்தரிக்கோல் போன்ற கூரான ஆயுதத்தால் அதிகாரிகளை பல தடவைகள் தாக்க முற்பட்டபோதும், முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக அவர் தனது மார்பில் பல தடவைகள் குத்திக்கொண்டுள்ளார். எனினும் பொலிஸார் அவரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.