PSGயை வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு டார்ட்மண்ட் தகுதி
பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனை தோற்கடித்து, 2013ம் ஆண்டிற்கு பிறகு சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு போருசியா டார்ட்மண்ட் தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதியின் முதல் கட்டத்தைத் தொடர்ந்து டார்ட்மண்ட் 1-0 என்ற முன்னிலையைப் பெற்றிருந்தது.
இரண்டாவது கட்டத்தின் இரண்டாம் பாதியில் அதாவது 50வது நிமிடத்தில் டார்ட்மண்ட் அணி ஒரு கோல் அடித்து இறுதி போட்டிக்கான தனது இடத்தை வலுப்படுத்திக்கொண்டது.
PSG ஐரோப்பிய சாம்பியன்களாக இருந்ததில்லை, 2020 இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
கோடையில் ரியல் மாட்ரிட்டில் சேர்வதற்கு முன்பு PSGக்கான தனது கடைசி போட்டியில் கைலியன் எம்பாப்பே விளையாடினர்.
சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி ஜூன் 1, வெம்ப்லியில் நடைபெறும்.
மேலும் இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பேயர்ன் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் உள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் லெக் ஜெர்மனியில் 2-2 என முடிவடைந்தது, மேலும் இரண்டாவது லெக் புதன்கிழமை ஸ்பெயினில் நடைபெறும்.