சீனாவில் 10,000 யுவான் சம்பாதித்த நாய் – ஆச்சரியத்தில் இணையவாசிகள்

சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் வசிக்கும் நபர் வளர்த்து வரும் பிரெஞ்சு புல்டோக் நாய், 10,000 யுவான் வருமானம் சம்பாதித்துள்ளது.
பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து கடந்த 5 ஆண்டுகளில் 10,000 யுவான் வருமானம் சம்பாதித்துள்ளது.
5 வயதான இந்த நாய், தினமும் மூன்று வேளைகளில் தனது உரிமையாளருடன் வெளியே சென்று, சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகிறது. ஒருமுறை 25 நிமிடங்களில் 5 கிலோ வரை பிளாஸ்டிக் சேகரித்துள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அதன் அபாரத் திறமையை கண்ட கடைக்காரர்கள், கடை வாசலில் போத்தல்களை தயாராக வைத்துக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆரம்ப காலத்தில் தினமும் சுமார் 20 யுவான் வருமானமாக இருந்தது. தற்போது 5 ஆண்டுகளில் மொத்த வருமானம் 10,000 யுவான் என்பதைக் கடந்து விட்டது.
இந்த நாயின் வீடியோக்கள் இடம்பெற்றுள்ள சமூக ஊடக பக்கத்துக்கு 80,000க்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இணையவாசிகள் நாயின் சுறுசுறுப்பையும், அதற்குக் கற்றுத்தந்த உரிமையாளரின் முயற்சியையும் பாராட்டி வருகின்றனர்.