தினமும் தலைக்கு குளித்தால் தலைமுடி வளருமா?
வெயிலோ, மழையோ, குளிரோ நீங்கள் தினசரி தலைக்கு குளிக்கும் பழக்கம் உள்ளவரா? அல்லது எவ்வளவு வெயில் அடித்தாலும், வியர்த்து ஒழுகினாலும் 3, 4 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தலைமுடியை கழுவுவீர்களா?
வழக்கமாக நீங்கள் எவ்வளவு நாளைக்கு ஒருமுறை தலைக்கு குளிக்க வேண்டும்?
அதிலும் வியர்த்து ஒழுகும் வெப்பமான மாதங்களில்…
உங்கள் தலைமுடியை எவ்வளவு அடிக்கடி சுத்தம் செய்வது, என்பது குறித்து நிபுணரிடம் நாங்கள் ஆலோசனை கேட்டோம்.
நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு குளிக்கலாம். உங்கள் உச்சந்தலையில் அதிகப்படியான சீபம் உற்பத்தியாகினால் தினசரி தலைக்கு குளிக்கலாம், என்று டாக்டர் ஷரீஃபா சாஸ் கூறினார். (dermatologist and cosmetologist at Shareefa’s Skin Care Clinic)
முடி வளர்ச்சியானது முக்கியமாக ஊட்டச்சத்துக் காரணிகளைப் பொறுத்தது, எனவே, தினமும் தலைக்கு குளிப்பதால் முடி நன்றாக வளரும் என்பது இல்லை. இருப்பினும், தினசரி தலைமுடி கழுவுவதை நான் பரிந்துரைக்கவில்லை.
உங்கள் தலைமுடியை எவ்வளவு அடிக்கடி கழுவ வேண்டும்?
பொடுகு மற்றும் செபோர்ஹெக் டெர்மடிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முடி உதிர்தல் மற்றும் உடைப்பு காரணமாக ஏற்படும்.
உச்சந்தலையில் உள்ள வியர்வை சுரப்பிகள் அதிகப்படியான சீபம் உருவாக்குகின்றன, எனவே உச்சந்தலையை அடிக்கடி கழுவுவதன் மூலம் சுத்தமாக வைத்திருப்பது முடி உதிர்வைத் தடுக்க முக்கியமானது, என்று சாஸ் கூறினார்.
எண்ணெய் நிறைந்த உச்சந்தலை மற்றும் வறண்ட முடி உள்ளவர்களுக்கு, உச்சந்தலை மற்றும் முனைகளுக்கு இடையில் நீரேற்றத்தை சமநிலைப்படுத்துவது முக்கியம்.
கோடையில், சூடான வறண்ட காற்றின் காரணமாக உச்சந்தலையில் அதிக சீபம் சுரக்கும். காம்பினேஷன் முடி கொண்டவர்கள் தங்கள் உச்சந்தலையை அடிக்கடி கழுவுகிறார்கள், அது அவர்களின் முனைகளை உலர வைக்கிறது என்பதை அவர்கள் உணரவில்லை. தலையின் மேற்புறத்தில் உள்ள எண்ணெய்கள் முனைகளை எட்டுவதில்லை, என்று சாஸ் கூறினார்.
உச்சந்தலையை சுத்தம் செய்ய ரசாயனம் மற்றும் சல்பேட் இல்லாத மென்மையான ஷாம்பூ பயன்படுத்தவும், முடியின் நீளத்திற்கு ஹைட்ரேடிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் தயாரிப்புகளைப் பயன்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார்.
தினமும் அல்லாமல், ஒருநாள் விட்டு ஒருநாள் தலைமுடியை கழுவுவது பரிந்துரைக்கப்படுகிறது.