செய்தி வாழ்வியல்

காலையில் எழுந்ததும் வயிற்றெரிச்சல் தொந்தரவு செய்கிறதா?

அசிடிட்டி பிரச்சனை பொதுவான செரிமான பிரச்சனை தான். இரவில் அதிகமாக சாப்பிட்டால் அல்லது மிகவும் தாமதமாக சாப்பிட்டால் இந்த பிரச்சனை வரும். அதற்காக நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆரோக்கியமான பழம் சாப்பிட்டே அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் பெறலாம். வீட்டில் வாழைப்பழம் இருந்தால் அதனை சாப்பிடுங்கள்.

அமிலத்தன்மை பிரச்சனை சரியாகிவிடும். காலையில் வெறும் வயிற்றில் தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சனை இருக்காது. இதுதவிர அமிலத்தன்மை பிரச்சனைக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம். இதுவும் அமிலத்தன்மையைக் குறைக்கும்.

அசிட்டி பிரச்சனை தீர்க்கும் வீட்டு வைத்தியம் :

கற்றாழை சாறு- பிரச்சனை அதிகமாக இருந்தால், உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் நான்கு ஸ்பூன் கற்றாழை சாறு குடிக்கவும். இது அசிடிட்டி பிரச்சனையை குணப்படுத்துகிறது.

நெல்லிக்காய்- வைட்டமின்-சி இதில் அதிக அளவில் உள்ளது. புளிப்பாக இருந்தாலும், அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது. 5-10 கிராம் நெல்லிக்காய் தூளை தினமும் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் அமிலத்தன்மையை நீங்கும்.

கிராம்பு மற்றும் துளசி இலைகள் – மெதுவாக மென்று சாப்பிடுவது குமட்டல், வாந்தி, அமிலத்தன்மை ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

ஆன்டாசிட் மருந்துகளை பழக்கப்படுத்தாதீர்கள், அதிக நேரம் மற்றும் அளவு எடுத்துக்கொண்டால், அவை பக்கவிளைவுகளில் வயிற்றின் ம்யூக்கல்களை மெலிய செய்து புண்களை உண்டாக்குகின்றன.

அமிலத்தன்மைக்கு சாப்பிடக்கூடாத உணவுகள்

சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது, டீ-காபி, புகைபிடித்தல், குளிர் பானங்கள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. வினிகர், தக்காளி, அன்னாசி, திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களையும் சாப்பிடக்கூடாது. அதேபோல், எக்காரணத்தைக் கொண்டும் அமிலத்தன்மை பிரச்சனை இருகும்போது வெறும் வயிற்றில் டீ அல்லது காபியை தவிர்க்கவும்.

அசிடிட்டி – கவனத்தில் கொள்ள வேண்டியவை

அசிடிட்டி பிரச்சனையை தவிர்க்க, தூங்குவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பாக உணவு சாப்பிடுவது மிக அவசியம். இது உணவு செரிமானத்திற்கு போதுமான நேரத்தை வழங்குகிறது. மேலும், தூங்கும் முன் பசி எடுத்தால், கிச்சடி, கஞ்சி போன்ற லேசான உணவுகளை உண்ணுங்கள். போதுமான தூக்கம் அவசியம்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி