12 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

கரவனெல்ல, தெஹியதகண்டிய, மஹாஓயா மற்றும் கல்முனை பிரதேசத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் மயக்க மருந்து நிபுணர்கள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் 842 சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள், 274 விசேட வைத்தியர்கள் மற்றும் 23 அவசர சிகிச்சை நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்னைக்கு அரசு உடனடித் தீர்வு காணத பட்சத்தில் சுகாதாரத் துறையே கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Visited 12 times, 1 visits today)