இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் வைத்தியர்கள்!
இலங்கையில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (11.10) எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அதன் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தரமற்ற மருந்துகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாமை தொடர்பில் தாம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)





