இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

டிரம்பை பாதித்த நோய் – நாள்பட்ட நரம்பு பாதிப்பு தொடர்பில் மருத்தவர்கள் விளக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்பை பாதித்த நாள்பட்ட நரம்பு பாதிப்பு தொடர்பில் மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

இந்த நிலைமை காரணமாக, கால்களிலுள்ள நரம்புகளால் இதயத்துக்கு ரத்தத்தை சரியாக அனுப்ப முடியாமல் போகும், அதனால் ரத்தம் பாதங்களில் சேர்ந்து வீக்கம் ஏற்படும்.

மூத்தோர், உடல் பருமன் அதிகமாக உள்ளோர் மற்றும் கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு இந்தப் பாதிப்பின் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

நாள்பட்ட நரம்பு பாதிப்பின் அறிகுறிகள்:

கால்கள் சோர்வாக இருக்கலாம்.
நோய் மோசமாக இருந்தால், கால்களில் புண்கள் ஏற்படும்.
காப்பிலரிஸ் என்ற சிறிய நரம்புகள் உடைந்து, ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்.
கால்களின் சருமம் வெடிக்கக்கூடும் மற்றும் கணுக்காலில் சருமம் பழுப்பு நிறமாக மாறலாம்.

நாள்பட்ட நரம்பு பாதிப்பு உயிருக்கு ஆபத்தானதா?

இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல, ஆனால் அதிக வலி மற்றும் உடல் ஊனத்தை ஏற்படுத்தலாம்.
ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள், சிகிச்சை பெறாமல் இந்த நிலையை விடுவதால் வாழ்க்கைத் தரத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, பல்வேறு மருத்துவ பிரச்னைகள் தோன்றலாம் என்று எச்சரிக்கின்றனர்.

நாள்பட்ட நரம்பு பாதிப்பின் கட்டங்கள்:

ஆரம்பக் கட்டத்தில் சிறிது வலி மட்டுமே இருக்கும்.
கடைசிக் கட்டத்தில், கால்களில் பல புண்கள் ஏற்படும்.
பெரும்பாலும் மூன்றாம் கட்டத்தில் இந்த நோயைக் கண்டறிய முடியும். அப்போது கால்களின் வீக்கம் மிகவும் தெளிவாகத் தெரியும்.

சிகிச்சைகள்:

வலியையும் அழுத்தத்தையும் குறைக்க சிகிச்சைகள் உள்ளன.
நோயைக் குணப்படுத்த முடியாது, ஆனால் கால்களை உயர்த்தி உடற்பயிற்சி செய்வது, காலுறைகள் (compression socks) அணிவதன் மூலம் சமாளிக்க முடியும்.
ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும், கால்களில் ஏற்படும் புண்களை தீர்க்கவும் மருந்துகள் வழங்கப்படலாம்.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி