31 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் : பொதுமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா!
உலகளாவிய ரீதியில் காய்ச்சல் உள்ளிட்ட பல தொற்றுக்கள் பரவி வருகின்ற நிலையில் பிரித்தானியா தனது பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.
இதன்படி 31 நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்குக் கூட கடுமையான காயம், மரணம், நோய், சிறையில் அடைக்கப்படுவது அல்லது பிற பயங்கரமான விளைவுகளின் ஆபத்து அதிகமாக இருக்கும் உலகின் பகுதிகளை வெளியுறவு அமைச்சகம் சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நுழைவுத் தேவைகள், பாதுகாப்பு மற்றும் சுகாதார அபாயங்கள் உட்பட, வெளிநாட்டுப் பயணம் பற்றிய ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகளைப் பெறுமாறும் அரசாங்கத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி Belarus , Kosovo, ரஷ்யா,உக்ரைன், மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக், லெபனான், பாலஸ்தீன், சிரியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, வெனிசுலா, ஹைடி, மியன்மார், நோர்த் கொரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.