இந்தியா செய்தி

அசுர பலத்தில் திமுக கூட்டணி; அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பு

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணைந்துள்ளது.

பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையிலான ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’, வரவிருக்கும் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்குத் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த அக்கட்சியின் நிர்வாகிகள், இந்த ஆதரவு முடிவை அறிவித்தனர்.

தேசிய செட்டியார் பேரவை என்ற அமைப்பை, கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் நடந்த மாநாட்டில் அரசியல் கட்சியாக மாற்றிய ஜெகநாத் மிஸ்ரா, தற்போது திமுகவின் அசுர பலமிக்க கூட்டணியில் இணைந்துள்ளார்.

அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், திமுகவின் இந்த விரிவடைந்து வரும் கூட்டணி பலம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் எனப் பலமான கூட்டணியைக் கொண்டுள்ள திமுகவுக்கு, புதிய அமைப்புகளின் ஆதரவு மேலும் வலுசேர்க்கும் எனக் கருதப்படுகிறது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!