பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுப்பாடு : ரணிலை ஆதரிக்க களமிறங்கும் புதிய கூட்டணி!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலத்த எதிர்ப்பையும் மீறி, புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கையை தொடர நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் அவரது குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்தப் புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியை சந்தித்து இந்த புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அந்த நிலைமைகளின் கீழ் கூட, இந்த குழுக்கள் எந்த மாற்றமும் இல்லாமல் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.
(Visited 12 times, 1 visits today)





