இலங்கை செய்தி

நினைவேந்தலுக்கு தடைகோரி மானிப்பாய் மற்றும் பலாலி பொலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிப்பு

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி மானிப்பாய் மற்றும் பலாலி பொலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது.

நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மானிப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுஸ்டிப்பதை தடை செய்ய கோரியே பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

நினைவு கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது. தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் நினைவுகூர முடியும் என தெரிவித்த நீதிமன்றம் பொலிஸாரின் தடை கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது.

இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி அச்சுவேலி மற்றும் தெல்லிப்பழை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

(Visited 14 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை