உலக அதிசயங்களில் ஒன்றான பெட்ராவில் இரகசிய கல்லறை கண்டுப்பிடிப்பு!
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான ஜோர்டானின் பெட்ராவில் உள்ள கருவூல நினைவுச்சின்னத்தில் ஒரு ரகசிய கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சிக் குழுக்கள் ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறித்த கல்லறையை கண்டுப்பிடித்ததாக கூறப்படுகிறது.
நினைவுச்சின்னத்தின் அடியில் 12 பழங்கால எலும்புக்கூடுகள் மற்றும் கல்லறை பிரசாதங்கள் அடங்கிய நீண்ட புதைக்குழி இருப்பதாக கூறப்படுகிறது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும், ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் புகழ்பெற்ற நினைவுச்சின்னத்தின் மறுபுறத்தில் இதேபோன்ற கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது புதிய கல்லறை கண்டறியப்பட்டுள்ளது.
கருவூலம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நபாட்டியன் மக்களால் பாலைவன பள்ளத்தாக்கின் சுவர்களில் கையால் செதுக்கப்பட்ட ஒரு முழு நகரத்தின் மையமாக அமர்ந்திருப்பதாகவும் இதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.