பேரிடர் நிவாரணம்: கட்சி நிதியை ஜே.வி.பி. பயன்படுத்தாதது ஏன்?
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமது கட்சி நிதியை ஜே.வி.பி. ஏன் இன்னும் பயன்படுத்தாமல் உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.
“ பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பண்டாரநாயக்க நிதியத்தில் இருந்து 25 கோடி ரூபாவை சந்திரிக்கா அம்மையார் வழங்கினார்.
பண்டாரநாயக்க நிதியத்தில் எமது கட்சிக்கும் பங்களிப்பு உள்ளது. எனவே, சந்திரிக்காவின் நடவடிக்கை எமக்கு பெருமை அளிக்கின்றது.
ஜே.வி.பியிடம் கோடிக்கணக்கான கட்சி நிதியம் உள்ளது. முடிந்தால் 10 மில்லியன் ரூபாவை வழங்குமாறு சவால் விடுக்கின்றேன். ஜே.வி.பி. நிதியத்தில் இருந்து இன்னும் உதவி வழங்கப்படவில்லை.
6 பில்லியனுக்கு மேல் ஜே.வி.பியிடம் நிதி உள்ளது. அதனை பயன்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் பணத்தை எவருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.” என்றார் சாமர தஸநாயக்க எம்.பி.





