அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியில் ஏற்பட்ட கோளாறால் விபரீதம் – மக்கள் மீது வழக்கு
அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியான JP Morgan தங்கள் வாடிக்கையாளர்கள் சிலர் மீது வழக்கு தொடுத்து வருகிறது.
குறித்த வங்கியில் சிலவகையான கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாக வங்கி குறிப்பிட்டுள்ளது.
வங்கியின் தானியக்க இயந்திரங்களிடமிருந்து அவர்கள் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான டொலர் ரொக்கத்தை எடுத்ததாகக் கூறப்பட்டது. அந்தக் கோளாறு குறித்து TikTok-இல் தெரியவந்தது.
வங்கியின் வாடிக்கையாளர்கள் காசோலையில் ஒரு பெரிய தொகையைத் தங்களுடைய பெயரில் எழுதினர். அதை வங்கி நிராகரிப்பதற்குள் அவர்கள் பணத்தை எடுத்துவிட்டனர். 2 தனிநபர்கள் 2 நிறுவனங்கள் மீது இப்போது வழக்கு பதிவாகியுள்ளது.
எடுத்த பணத்தை வட்டியுடன் திரும்பக் கொடுக்க வழக்கு போடப்பட்டுள்ளது. அதோடு வங்கிக்கு ஏற்பட்ட வேறு செலவுகளையும் அவர்கள் செலுத்த வேண்டும் என்று வங்கி சொல்கிறது.