லண்டன் ஹீட்த்ரோ விமான நிலையத்தில் செயல் இழந்த கடவுச்சீட்டு தானியங்கி கதவுகள்-பரிதவிக்கும் பயணிகள்

லண்டன் ஹீட்த்ரோ விமான நிலையத்தில்கடவுச்சீட்டு தானியங்கி கதவுகள் செயழிலந்ததால் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தாமதத்தை எதிர்நோக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹீத்ரோ, மான்செஸ்டர் மற்றும் கேட்விக் உள்ளிட்ட விமான நிலையங்களில் தொழிநுட்ப பிரச்சினைக் காரணமாக நேற்று (27) முதல் பயணிகள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இடையூறுகளை சரிசெய்ய விமான நிறுவனங்கள் மற்றும் துறைமுக ஆப்ரேட்டர்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு தானியங்கி கதவுகளில் என்ன பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் உள்துறை அலுவலகம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இங்கிலாந்திற்குள் வரும் நபர்கள் சரிபார்க்கப்படும் இடங்களில் இது தொழில்நுட்ப ரீதியாக சவாலாக உள்ளதாகவும், மின்-வாயில்கள் கொண்ட பெரிய விமான நிலையங்களில் இதன் தாக்கம் முக்கியமாக உணரப்படுகிறது என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
We are aware of a nationwide issue impacting the eGates, which are operated by Border Force. This issue is impacting a number of ports of entry and is not Heathrow specific. (1/2) pic.twitter.com/TnfE4TMRfG
— Heathrow Airport (@HeathrowAirport) May 27, 2023