செய்தி தமிழ்நாடு

இயக்குனர் பாண்டியராஜிடம் இரண்டு கோடி மோசடி ஜவுளி கடை உரிமையாளர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜ்.

இவர் பசங்க உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனராக உள்ளார்.

இவரிடம் இவருடைய நண்பராக இருந்த குமார் என்பவர் புதுக்கோட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபல ஜவுளி கடை நடத்தி வருகிறார்.

நிலம் வாங்கி தருவதாக கூறி திரைப்பட இயக்குனர் பாண்டியராஜிடம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

குறித்த நேரத்திற்குள் பணமும் தரவில்லை நிலமும் வாங்கித் தரவில்லை.

இது குறித்து பலமுறை திரைப்பட இயக்குனர் பாண்டியராஜ் கேட்டபோது ஒரு கட்டத்தில் அவர் இடத்திற்கான பத்திரத்தை கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த பத்திரம் போலியானது என்பது தெரிய வந்தது இதனை தொடர்ந்து திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திரைப்பட இயக்குனர் பாண்டிராஜை ஏமாற்றிய குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!