துருக்கி மற்றும் இஸ்தான்புல் இடையே நேரடி விமான சேவை!
கொழும்பு மற்றும் துருக்கிய நகரமான இஸ்தான்புல் இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பு மற்றும் இஸ்தான்புல் இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான அங்கீகாரம் பெறுவதற்காக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் Demet Sekercioglu மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
“தற்போது, துருக்கிய ஏர்லைன்ஸ் இலங்கையுடன் மாலத்தீவில் நிறுத்தத்தை உள்ளடக்கிய ஒரு பாதை வழியாக இருக்கிறது. , இதன் விளைவாக ஒன்றரை மணி நேரம் கூடுதல் பயண நேரம் கிடைக்கும்.
இந்த வழித்தடத்தால் ஏற்படும் தாமதம் பயணிகளால் விரும்பப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ப்டுள்ளது.
இந்த புதிய சேவையானது ஐரோப்பிய பயணிகளுக்கு பயனளிப்பது மட்டுமன்றி, இலங்கைக்கு பயணிக்க அவர்களை ஊக்குவிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.