தினேஷ் ஷாப்டரின் கொலை – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கோடீஸ்வர வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோரப்பட்ட பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், குறித்த பரிசோதனை அறிக்கை தொடர்பில் ஆய்வாளருக்கு நினைவூட்டல் அனுப்புமாறும் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)