டெல்லியில் விமான போக்குவரத்தை முன்னெடுப்பதில் சிக்கல்!

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று (05.02) பல விமானங்கள் தாமதமாகும் என இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (04) அந்தப் பகுதியில் கடும் மழை பெய்துள்ளதுடன், பஞ்சாப் மற்றும் மேற்கு ராஜஸ்தானில் பனிமூட்டம் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 13 times, 1 visits today)