ஹமாஸ் தலைவரின் மூன்று மகன்கள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதா? வெளியான தகவல்
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவும் ஹனியேவின் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மூத்த தளபதிகள் அல்லது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கலந்தாலோசிக்காமல் காஸாவில் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்களை இஸ்ரேலியப் படைகள் கொன்றதாக இஸ்ரேலிய ஊடகங்கள் வியாழனன்று செய்தி வெளியிட்டுள்ளன.
மூத்த இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, வாலா செய்தி நிறுவனம், இஸ்ரேலிய இராணுவம் மற்றும் ஷின் பெட் உளவுத்துறையால் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் குறித்து நெதன்யாகு அல்லது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்
அமீர், முகமது மற்றும் ஹஸெம் ஹனியே ஆகியோர் போராளிகளாக குறிவைக்கப்பட்டதாகவும், அவர்கள் ஹமாஸின் அரசியல் தலைவரின் மகன்கள் என்பதற்காக அல்ல என்றும் அது கூறியது. ஹனியாவின் நான்கு பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து இஸ்ரேலிய இராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.