ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தம்மிக்க பெரேரா
இலங்கையின் பிரபல செல்வந்த வர்த்தகரான தம்மிக்க பெரேரா அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
51 சதவீத வாக்குகளைப் பெறுவது உறுதியானால் மட்டுமே தாம் வேட்பாளராக இருப்பேன் என அவர் ‘தேசய’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் விளக்கமளித்த பெரேரா, தனது வேட்புமனு மீது பெரும்பான்மையான கட்சிகளிடையே ஒருமித்த கருத்து, தேர்தலில் தனது வாய்ப்புகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றார்.
தாம் ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யாக இருந்ததைக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் தனக்குச் சொந்தமான சுமார் 18 முன்னணி நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறினார்.
கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பெரேரா, தனது DP கல்வித் திட்டம் இளைஞர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக அவர்களுக்கு அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
இத்திட்டத்தின் மூலம் 1.1 மில்லியன் குடும்பங்களைச் சேர்ந்த 1.5 குழந்தைகள் பயனடைகிறார்கள், DP Education IT Campus முயற்சியின் மூலம் இந்த எண்ணிக்கையை இரண்டு ஆண்டுகளில் 1.65 மில்லியனாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.