சிறையில் பட்டினியில் இருந்த தேசபந்து தென்னகோன்

நீதிமன்றத்தில் ஆஜரானதையடுத்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவை புறக்கணித்ததாக சிறைச் சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜரான இவர் 20 ஆம் திகதி வரை அங்குணுகொலபெலஸ்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவர் 20 ஆம் திகதி வரையில் சிறைச் சாலையில் எந்த ஒரு உணவையும் உட்கொள்ளவில்லை எனவும் எவருடனும் பேசவில்லை எனவும் சிறைச்சாலைக் கட்டில் அமர்ந்திருந்தவாறு பெரும் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எனினும் நேற்று மீண்டும் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இவர் தும்பறை சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(Visited 1 times, 1 visits today)