இலங்கை செய்தி தமிழ்நாடு

தமிழக முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று (19) சென்னையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இதன்போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு விரைவாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதி அமைச்சர் பிரதீப் தமது நன்றியை தமிழக முதல்வரிடம் தெரிவித்துக் கொண்டார்.

இதன்போது மலையக மாணவர்களுக்கான தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சபரிமலை ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவிகளை வழங்கவும் கலை, கலாச்சார கல்வி அபிவிருத்திக்கு தொடர்ந்தும் தமிழக அரசு உதவி மற்றும் ஒத்துழைப்புகளை நல்குவதாகவும் இதன் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் சென்னையில் உள்ள இலங்கைக்கான உதவி உயரஸ்தானிகர் கலாநிதி கணேசன் கேதீஸ்வரனும் கலந்து கொண்டார்.

காலம் உணர்ந்து செயல்பட்ட இந்திய அரசுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் மலையக மக்களுக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

நீண்ட நேர கலந்துரையாடலின் போது இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் மலையக மக்களின் வாழ்வு அவர்களின் எதிர்காலம் அதற்காக இலங்கை அரசாங்கம் எடுக்கும் திட்டங்கள் இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசுகளால் செயற்படுத்தக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!