ஆரோக்கியம்

வெண்மையாக்கும் பற்பசைகள் பயன்படுத்தும் மக்களுக்கு பல் நிபுணர்கள் எச்சரிக்கை

வெண்மையான புன்னகையை நாடி வெண்மையாக்கும் பற்பசைகளை பயன்படுத்தினால் ஈறுகளுக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் என்று பல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வெண்மையாக்கும் பற்பசைகள் உண்மையில் பற்களை வெண்மையாக்குவதில்லை. அவை வெளிப்புற கறைகளை மட்டும் அகற்றி பற்கள் வெண்மையாகத் தெரிகின்றதுபோல் செய்யும் என மருத்துவர் ஜேம்ஸ் மார்டினியாக் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதில் உள்ள அதிக சிராய்ப்பு பொருட்கள் பற்சிப்பியை மெலிதாக்கி, பற்களை மஞ்சளாக்கவும், உணர்திறன் அதிகரிக்கவும் செய்கின்றன என அவர் குறிபிப்பிட்டுள்ளார்.

RDA (Relative Dentin Abrasivity) மதிப்பீட்டின் அடிப்படையில், 101–250 மதிப்புள்ள பற்பசைகள் ‘அதிக சிராய்ப்பு’ என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வரம்பில் பல வெண்மையாக்கும் பற்பசைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெராக்சைடு போன்ற உணர்திறனை தூண்டும் பொருட்கள் பல் நரம்புகளை எரிச்சலடையச் செய்து, கூச்ச உணர்வு மற்றும் ஈறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

முதலில் வேறுபட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவோர், உணர்திறன் அல்லது எரிச்சல் ஏற்படும்போது உடனடியாக பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

பாதுகாப்பாக பற்களை வெண்மையாக்க விரும்புவோர், பல் மருத்துவரின் வழிகாட்டுதலோடு தொழில்முறை முறைகளை பின்பற்றுவது சிறந்தது.

SR

About Author

You may also like

ஆரோக்கியம்

இதயம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள்

இதயத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்க வேண்டும். மோசமான இரத்த ஓட்டம் இந்த நாட்களில் மிகவும் பொதுவான பிரச்சினையாக உள்ளது. உடல்
ஆரோக்கியம் இலங்கை

கோவிட் தடுப்பூசி பற்றிய நினைவூட்டல்

  மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சினோபார்ம் எதிர்ப்பு கோவிட் தடுப்பூசிகளைப் பெறலாம் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். தேவையான அளவு கொவிட் தடுப்பூசியைப்
error: Content is protected !!