இலங்கையில் டெங்கு நோய் தொற்று அச்சுறுத்தல் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய நிலைமை உள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான காலநிலைக் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 34, 906 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, மேல் மாகாணத்தில் இதுவரையில் 14, 248 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தின் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, நிலவும் மழையுடனான காலநிலையைக் கருத்திற் கொண்டு டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)