பிரான்சில் வெடித்த ஆர்ப்பாட்டம்: நாட்டு மக்களுக்கு உரையாற்றும் ஜனாதிபதி மக்ரோன்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
பிரான்ஸ் பிரதமர் மிச்செல் பார்னியர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் உரையாற்றவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் பிரதமர் மிச்செல் பார்னியருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை அந்த நாட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளது.
இன்று காலை எலிசே மாளிகைக்குச் சென்ற Barnier, அங்கு வைத்து அவரது பதவி விலகல் கடிதத்தை கையளித்தார்.
கிட்டத்தட்ட ஒருமணிநேரம் ஜனாதிபதி மக்ரோனுடன் அவர் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை அனைத்து பொறுப்புக்களையும் அவரே மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மிக விரைவாக புதிய பிரதமரை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நியமிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.