துருக்கியில் அடுக்கு மாடி கட்டிடங்கள் வெடிபொருட்களை நிரப்பி இடிப்பு!
துருக்கியில் 9 அடுக்கு மாடி கட்டிடங்கள் வெடிபொருட்களை நிரப்பி இடிக்கப்பட்டுள்ளன.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த பிப்ரவரி மாதம் பூகம்பத்தால் பேரழிவு ஏற்பட்டது.
தொடர்ச்சியாக 6 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல நூறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து 50,000 அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மாலத்யா நகரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 15 மாடிகளை கொண்ட 9 அடுக்கு மாடி கட்டிடங்கள் வெடி பொருட்களை வைத்து தகர்க்கப்பட்டது.
கட்டடங்கள் சில நொடிகளில் இடிந்து விழுந்த போது எழுந்த புகையானது அந்த பகுதி முழுவதுமாக நிறைந்தது.
இந்த கட்டிடங்களை தகர்க்க 30 ஆயிரம் கேப்சுல்களில் 1660 கிலோ கிராம் வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக கட்டட இடிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கட்டடங்கள் இடிக்கப்பட்ட பகுதியில் பொதுமக்களை வெளியேற்றி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாலத்யா நகரத்தின் அதிகாரிகள் செய்திருந்தன.