இங்கிலாந்தில் மகப்பேறு செவிலியிர்களின் வேலைநேரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை!
இங்கிலாந்தில் மகப்பேறு செவிலியர்களின் வேலை நேரங்களுக்கு சட்டப்பூர்வ கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 14,000 க்கும் மேற்பட்டோர் மனுவொன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
அவர்கள் ஆபத்தான நீண்ட ஷிப்டுகளில் (shifts) வேலை செய்வதாக தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் 24 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்வதாகவும், இது மனசோர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜெனிஃபர் காஹில்லின் ( Jennifer Cahill) என்ற மருத்துவ பணியாளர் 30 மணிநேரம் வேலை செய்ததை தொடர்ந்து உயிரிழந்திருந்தார். இந்த விடயம் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்தே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மகப்பேறு சேவைகள் குறித்த சுயாதீன விசாரணை நடந்து வருவதாக சுகாதாரம் மற்றும் சமூகப் பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





