இந்தியா

டெல்லி- நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு சீல்!

தனியார் இணையதள செய்தி ஊடகமான ‘நியூஸ் கிளிக்’ நிறுவனத்திற்கு டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடந்த 3 ஆண்டுகளில் 38 கோடி ரூபாய் பணம் பெற்ற குற்றச்சாட்டில் நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், இன்று காலை நியூஸ் கிளிக் அலுவலகம், அதில் பணியாற்றும் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் டெல்லி, நொய்டா, காசியாபாத் பகுதிகளில் சோதனை நடைபெற்றது.

Police seal Delhi office of NewsClick following raids under UAPA | Manorama  English

இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரின் மகன் ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதுடன் யெச்சூரியின் வீட்டில் தங்கியுள்ளதால் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையில் நிறுவன ஊழியர்களின் லேப்டாப், மொபைல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் சீனாவுக்கு ஆதரவாக செய்தி பதிவிட பணம் பெற்றதாகக் கூறி, இன்று மாலை நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்துக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்றச் சட்டத்தின் கீழ் நியூஸ் கிளிக் ஊடக நிறுவனம் மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே