டெல்லி முதல்வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
இந்தியாவின் பிரபல எதிர்க்கட்சி அரசியல்வாதியும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியாவின் நிதிக் குற்ற முகவரகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை மார்ச் 28ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை இயக்குநரகம் கைது செய்துள்ளது.
குறித்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வா் கேஜரிவாலுக்கு இதுவரை ஒன்பது முறை அழைப்பாணைகளை அமலாக்கத் துறை அனுப்பியது.
அது சட்டவிரோதம் என்று கூறி அவா் ஆஜராகாமல் இருந்து வந்தாா். தொடா்ந்து முதல்வா் கேஜரிவால் வியாழக்கிழமை (மாா்ச் 21) கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் ஏற்கெனவே துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் சில அதிகாரிகள் மீது அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை மார்ச் 28ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் மார்ச் 28ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அவரை ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேஜரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 6 நாட்கள் மட்டும அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.