டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலாக அறிவிப்பு
இந்த வாரம் டெல்லியில் பலரைக் கொன்ற கார் குண்டுவெடிப்பை பயங்கரவாதத் தாக்குதல் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
“தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவத்தை நாடு கண்டுள்ளது,” என்று பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) அமைச்சரவை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், குற்றவாளிகள் அவர்களின் ஒத்துழைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டு விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்காக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க இடமான செங்கோட்டை பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முக்கிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முகலாய கால நினைவுச்சின்னமான 17ம் நூற்றாண்டின் செங்கோட்டையின் மீதான தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டால், 2011ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பாக இது இருக்கும்.
தொடர்புடைய செய்தி
டெல்லி கார் குண்டு வெடிப்பு – பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை!




