PlayOff சுற்றில் இருந்து வெளியேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ்
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்களை சேர்த்தது. அதிரடியாக ஆடிய பிரப்சிம்ரன் 65 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 103 ரன்களை விளாசினார்.
டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல், பிரவீன் தூபே, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கேப்டன் டேவிட் வார்னர் 27 பந்தில் 54 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், டெல்லி அணி 136 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் சார்பில் ஹர்பிரீத் பிரார் 4 விக்கெட்டும், நாதன் எல்லீஸ், ராகுல சஹார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த தோல்வி மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் இருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெளியேறியது.