உலகம் செய்தி

பயன்பாட்டில் ஏற்பட்ட வீழ்ச்சி – அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தில் சரிவு

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் வெளிநாட்டு நாணய இருப்புகளுக்காக அமெரிக்க டொலர்களை மட்டும் பயன்படுத்தாமல், மற்ற மாற்று நாணயங்களையும் பயன்படுத்துவதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

இந்த நிலையை சர்வதேச அளவில் அமெரிக்க டொலரின் ஆதிக்கம் சரிவு எனலாம்.

சர்வதேச அளவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நான்கு நாணயங்கள் அமெரிக்க டொலர், யூரோ, ஜப்பானிய யென் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங் ஆகும்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, யூரோ, யென் மற்றும் ஸ்டெர்லிங் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு இருப்புக்களுக்கான அமெரிக்க டொலரின் பயன்பாடு குறைந்துள்ளது.

அத்துடன், புதிய மாற்று நாணயங்களாக அவுஸ்திரேலிய டொலர்கள், கனேடிய டொலர்கள், சீன யுவான், தென்கொரிய வொன் மற்றும் சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் சுவீடன், நார்வே போன்ற நோர்டிக் நாடுகளின் நாணயங்களும் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் மத்திய வங்கிகள் தங்கள் வெளிநாட்டு இருப்புக்களை வலுப்படுத்த வேண்டும்.

வெளிநாட்டு கையிருப்பில் பாரம்பரியமற்ற நாணயங்கள் சேர்க்கப்பட்டாலும், உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டொலர் மிகவும் சக்திவாய்ந்த நாணயமாக உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!