தலைமன்னார் – கொழும்பு இடையே கடுகதி புகையிரத சேவை ஆரம்பிக்க தீர்மானம் – ரணில் விக்கிரமசிங்க

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது.இதன்போது கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவித்தார்.
இதன் போதே தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாகவும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி சேவையானது ஆரம்பித்து வைக்கப்பட்ட இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்திய மற்றும் இலங்கைக்கான பயணத்தை இலகுவாக்கும் வகையில் குறித்த சேவை அமையும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மடு திருத்தலத்தில் வைத்து மேலும் தெரிவித்தார்.
(Visited 14 times, 1 visits today)