அமெரிக்காவில் 40 விமான நிலையங்களில் சேவைகளை குறைக்க தீர்மானம்!
அமெரிக்க அரசாங்கத்தின் பணி நிறுத்தங்கள் காரணமாக சுமார் 40 விமான நிலையங்களின் சேவை குறைக்கப்படும் என போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி (Sean Duffy) எச்சரித்துள்ளார்.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சோர்வு குறித்து முறைப்பாடு அளித்துள்ளதால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறக்குறைய ஒரு நாளைக்கு 3,500 முதல் 4,000 விமானங்கள் இரத்து அல்லது தாமதமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவில் செலவீன சட்டமூலம் நிறைவேற்றப்படாத நிலையில் கருவூலத்துறைக்கான நிதியை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 1.4 மில்லியன் ஊழியர்கள் சம்பளம் இன்றி பணிப்புரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதன்காரணமாக பல தொழிலாளர்கள் வேலையை விட்டு விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எஞ்சிய சொற்ப ஊழியர்களை கொண்டு நாளாந்த வேலைகளை செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும், அவர்களுக்கும் ஒரு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தலைவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட நேரம் உழைப்பதன் காரணமாக தொழிலாளர்கள் சோர்வடைந்துள்ளதாக தெரிவித்த அவர், 10 சதவீதமான சேவைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.





