இலங்கை

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்று இன்றையதினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை காணாமல் போயிருந்த நிலையில் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் தென்னம் காணியொன்றில் இருந்து துர்நார்ற்றம் வீசியமையால் குறித்த கிராமவாசியொருவர் சென்று பார்த்தவேளை அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் இருந்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதிய சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.கெங்காதரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி சுபுண் ஏக்கநாயக்க மற்றும் கிராம சேவையாளர் வே.மேகானந்தசிவம் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

தற்போது உடலம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நபரிற்கு அருகே பாட்டா ஒன்றும் அண்மித்த பகுதியில் சைக்கிள் ஒன்றும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்