ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு
இந்தியாவில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 850க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், தற்போது வரை 120 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால், அதன் பல பெட்டிகள் எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.
அப்போது கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு ரயில் மோதியது. மேலும் மற்றொரு சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களைக் மீட்க பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் செய்தியில், விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.